Tuesday, February 9, 2010

வலி

பரிதி மறைத்த
மதியின் நிழல்
பத்து நிமிடமே புவிதனில் !
உன்னை மறைத்த
மரணத்தின் வேதனை
எட்டு வருடமாய்
என் நெஞ்சினில் !

குறுநகையும்
செல்லக் கோபமும்
குற்றேவலும்
தவழ்ந்த முகம்தனில்,
களையிழந்து
மீளா உறக்கம்
தரித்த நாளை என்றும்
மறவேன்.

அண்ணா என்றழைத்தவளை
அந்நாளில் கொண்டு சென்ற
காலனே ! என்னை
எந்நாளும் கலங்கச் செய்ததேனோ?

No comments:

Post a Comment